TA/690110b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இந்த பக்தர்களின் சகவாசத்தை கைவிட்டவுடன், மாயை உடனடியாக பிடித்துக்கொள்ளும்.
உடனடியாக. மாயை பக்கத்தில்தான் இருக்கும். இந்த சகவாசத்தை நாம் கைவிட்டவுடன் மாயை சொல்லும் "ஆம், என்னுடைய சகவாசத்திற்கு வா." சகவாசம் இல்லாமல் யாராலும் நடுநிலையாக இருக்க முடியாது. அது சாத்தியமில்லை. மாயையுடன் அல்லது கிருஷ்ணருடன் சகவாசம் கொண்டுதான் ஆகவேண்டும். எனவே, எல்லோரும் பக்தர்களுடன், கிருஷ்ணருடன் சகவாசத்தை வைத்துக் கொள்வதில் தீவிரமாக இருக்கவேண்டும். கிருஷ்ணர் என்றால்... நாம் கிருஷ்ணரை பற்றி பேசும்போது, "கிருஷ்ண" என்றால் கிருஷ்ணர் அவருடைய பக்தர்களுடன் இருப்பதாகும். கிருஷ்ணர் என்றுமே தனியாக இருக்க மாட்டார். கிருஷ்ணர் ராதாராணியுடன் இருக்கின்றார், ராதாராணி கோபியர்களுடன் இருக்கின்றார், மேலும் கிருஷ்ணர் இடையச் சிறுவர்களுடன் இருக்கின்றார். நாம் அருவவாதிகள் அல்ல. நாம் கிருஷ்ணரை தனியாக பார்ப்பதில்லை. அதேபோல கிருஷ்ணர் என்றால் அவருடைய பக்தர்களுடன் என்று பொருள். கிருஷ்ண உணர்வு என்றால் கிருஷ்ணருடைய பக்தர்களுடன் சகவாசம் கொண்டிருப்பதாகும்." |
690110 - Bhajan and Purport to Gaura Pahu - லாஸ் ஏஞ்சல்ஸ் |