"ஜெபம் செய்வதன் மூலம் கிருஷ்ணரின் மீதான அன்பு அதிகரிப்பதையும் ஜடம் மற்றும் பௌதிக இன்பத்திற்கான விருப்பம் குறைகின்றதையும் உணர்ந்தால், நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஜெபம் செய்வதன் பலனாக, பௌதிக விஷயங்கள் மீதான ஏக்கத்தை அதிகரித்துக் கொள்கிறீர்கள் என்றால், அது முன்னேற்றம் அல்ல. அது ஒரு அபராதம் ஆகும். ஒருவர் "நான் இப்பொழுது அபராதத்துடன் ஜெபம் செய்கின்றேன். நான் அதனை சரிகட்ட வேண்டும்" என்று உணர வேண்டும். கடவுள் மீதான கிருஷ்ணர் மீதான அன்பை அதிகரித்துக் கொள்கின்றோமா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்."
|