"இந்த மனித வாழ்வு கடவுளின் சட்டங்களை அறிந்து கொள்வதற்கானது-விஞ்ஞான பூர்வமாக கடவுளின் சட்டங்களை அறிந்து கொள்வதற்கானது. கற்றுக்கொள்ளுங்கள், நாம் பல உதாரணங்களை கொடுத்தது போல. ஏன் மற்றவர்களின் சொத்துக்களில் அத்துமீறல் செய்கிறீர்கள்? எல்லோருக்கும் வாழ உரிமை உண்டு. ஏன் மற்ற விலங்குகளை கொலை செய்கிறீர்கள்? இவை இயற்கையின் சட்டங்களை மீறுவதாகும். நீங்கள் துன்பப்பட்டாக வேண்டும். எனவே இந்த விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் உங்களுக்கு நல்ல உடல் கிடைத்துள்ளது. நன்றாக உடை அணிந்து கொள்வதால் மட்டும் நல்லவராகிவிட முடியாது. இல்லை. கடவுளின் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் நல்லவர். ஆம். ஆனால் மக்கள் நன்றாக உடை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், மேலும் தங்கள் இதயத்தில் விலங்கை விட கீழ் நிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான நாகரிகம் கண்டனத்துக்குரிய நாகரிகம். இந்த ஹரே கிருஷ்ண உச்சாடனம் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துவதாகும். அதனால் உங்கள் உண்மையான வாழ்க்கை தரத்திற்கு வருவதற்கு இந்த இயக்கத்தில் நீங்கள் சேர வேண்டும். சேதோ-தர்பண-மார்ஜனம் (CC Antya 20.12, Śikṣāṣṭaka 1). இதயத்தை தூய்மைப்படுத்துவது."
|