TA/690112 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம் பாவம் நிறைந்த வாழ்க்கை என்றால், அறியாமையினால் ஆனது. எவ்வாறு என்றால் நான் இந்த சுடரை தொட்டால், அது சுட்டுவிடும். யாராவது சொல்லலாம், "ஓ, நீ சுட்டுக் கொண்டாய். நீ பாவம் நிறைந்தவன்." இது பொது அறிவு. "நீ சுட்டுக் கொண்டாய். நீ பாவம் நிறைந்தவன், ஆகையினால் நீ சுட்டுக் கொண்டாய்." அது ஒரு உணர்வு, அது சரியானது. "நான் பாவம் நிறைந்தவன்" என்றால் எனக்கு தெரியாது, அதாவது நான் இந்த சுடரை தொட்டால், நான் சுட்டுக் கொள்வேன் என்று. இந்த அறியாமை என் பாவமாகும். பாவம் நிறைந்த வாழ்க்கை என்றால், அறியாமை நிறைந்த வாழ்க்கை. ஆகையினால், இந்த முப்பத்தி நான்காவது பதத்தில், "சும்மா உண்மையை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், அறியாமையில் இருக்காதீர்கள். உண்மையை ஒரு ஆன்மீக குருவை அணுகி கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்." உங்களுக்கு ஒரு வழி இருக்கும் போது நீங்கள் ஏன் அறியாமையில் இருக்க வேண்டும்? அது நம் முட்டாள்தனம். ஆகையினால் நான் துன்பப்படுகிறேன்."
690112 - சொற்பொழிவு BG 04.34-39 - லாஸ் ஏஞ்சல்ஸ்