"எவ்வாறென்றால் நீங்கள் ஏதோ ஒன்றை பயிற்சி செய்து, மேலும் நீங்கள் தேர்வு கூடத்தில் நன்றாக உடனடியாக எழுதிவிடுவீர்கள். ஆனால் நீங்கள் பயிற்சி செய்யவில்லை என்றால், எவ்வாறு எழுதுவீர்கள்? அதேபோல், நீங்கள் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்ய பயிற்சி செய்தால், பிறகு தூக்கத்தில் கூட நீங்கள் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்வீர்கள். அங்கே மூன்று நிலைகள் உள்ளன: விழிப்பு நிலை; தூங்கும் நிலை; கனவு காணும் நிலை; மேலும் மயக்க நிலை. மயக்க நிலை. உணர்வுள்ள நிலை..., நாம் வெறுமனே கிருஷ்ணரை உணர்வினுள் தள்ளுகிறோம். மயக்க நிலையில் கூட நம்முடன் கிருஷ்ணர் இருப்பார். எனவே அதிர்ஷ்டவசமாக அந்த பரிபூரண நிலைக்கு வந்தால், பிறகு இந்த வாழ்க்கை, பௌதிக உலகில் உங்கள் இறுதி வாழ்வாகும். நீங்கள் ஆன்மீக உலகத்திற்குச் சென்று உங்கள் நித்திய வாழ்வை பெறுவீர்கள், ஆனந்தமான வாழ்க்கை, மேலும் கிருஷ்ணருடன் நடனம் ஆடுவீர்கள்." அவ்வள்வுதான்."
|