"ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது அதாவது "வரவிருக்கும் இறப்பிலிருந்து குழந்தையை காப்பாற்ற முடியாத எவரும் தந்தையாக விருப்பம் கொள்ளக் கூடாது, ஒருவரும் தாயாக விருப்பம் கொள்ளக் கூடாது." ஆக அது ஆன்மீக குருவின் கடமையும் ஆகும். சீடரை வரவிருக்கும் இறப்பிலிருந்து காப்பாற்ற முடியாவிட்டால் ஒருவர் ஆன்மீக குருவாகக் கூடாது. எனவே வரவிருக்கும் அந்த இறப்பு என்பது என்ன? வரவிருக்கும் இறப்பு என்றால்... ஏனென்றால் நாம் ஆன்மீக ஆன்மா, நமக்கு இறப்பு இல்லை. ஆனால் வரவிருக்கும் இறப்பு என்பது இந்த உடலைப் பற்றியது. எனவே மக்களை வரவிருக்கும் பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் காப்பாற்றுவது, ஆன்மீக குரு, பெற்றோர், நாடு, உறவினர், நண்பர்கள், அனைவருடைய கடமையுமாகும்."
|