"இயற்கையான அன்பு... ஒரு உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது: ஒரு இளம் வாலிபன் இளம் யுவதியை எவ்வித அறிமுகமும் இல்லாமலேயே, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது, அங்கு அன்புக்கான நாட்டம் ஏற்படுகிறது. அது தன்னிச்சையானது எனப்படுகிறது. ஒருவர் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. வெறும் பார்வையே அன்பு செய்யும் நாட்டத்தை ஏற்படுத்தும். அதுவே இயற்கையானது எனப்படுகிறது. கடவுளின் மீது அன்பு செலுத்தும் விஷயத்தில் நாம் முன்னேறியிருக்கும் போது, எவ்வளவுக்கு எவ்வளவோ அவ்வளவுக்கவ்வளவு, பார்த்ததும் அல்லது அவரை பற்றி ஏதாவது ஒன்றை நினைத்ததும் உடனே ஆனந்தம் ஏற்படும், அது தன்னிச்சையானது. பகவான் சைதன்யர் ஜகன்நாதர் ஆலயத்தினுள் நுழைந்தபோது ஜகன்நாதரை பார்த்ததும் அவர் உடனே மூர்ச்சையுற்றார்: "இதோ எனது பிரபு."
|