TA/690116 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் புலன் இன்பத்தை விட்டுவிட வேண்டும். நிச்சயமாக, இந்த பௌதிக வாழ்க்கையில் நமக்கு புலன்கள் இருக்கின்றன, மேலும் நாம் அதை பயன்படுத்த பயிற்சி செய்திருக்கிறோம். நாம்மால் அதை நிறுத்த முடியாது. அதை நிறுத்த வேண்டி எந்த கேள்வியும் இல்லை, ஆனால் அதை ஒழுங்குபடுத்த வேண்டும். எவ்வாறு என்றால் நாம் உணவு உட்கொள்வது போல். விஷய என்றால் உட்கொள்வது, தூங்குவது, இனச்சேர்க்கையில் ஈடுபடுவது மேலும் தற்காத்துக் கொள்வது. எனவே இந்த காரியங்கள் அனைத்தும் தடைசெய்யப்படவில்லை, ஆனால் கிருஷ்ண உணர்வுக்கு சாதகமாக செயல்படுத்த, அவை சரிசெய்யப்பட்டுள்ளது. எனவே நாம் அதை எடுக்க கூடாது... உட்கொள்வது போல. நாவை திருப்திபடுத்த சும்மா உட்கொள்ளக் கூடாது. கிருஷ்ண உணர்வில் செயல்படுத்த உடலை பொருத்தமாக வைத்துக் கொள்ள உணவு உட்கொள்ள வேண்டும். ஆக உட்கொள்வது நிறுத்தப்படவில்லை, ஆனால் அது சாதகமாக ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அதேபோல், இனச்சேர்க்கை. இனச்சேர்க்கை நிறுத்தப்படவில்லை. ஆனால் ஒழுங்குமுறை கொள்கை என்னவென்றால், அதாவது நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் மேலும் கிருஷ்ண பக்தி பிள்ளைகளுக்காக மட்டும் நீங்கள் உடலுறவு கொள்ளலாம். இல்லையெனில் அதில் ஈடுபடாதீர்கள்."
690116 - Bhajan and Purport to Parama Koruna - லாஸ் ஏஞ்சல்ஸ்