TA/690119 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நமது கிருஷ்ண உணர்வு இயக்கம் மக்கள் இந்த வேத இலக்கியங்களை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பதற்காக உள்ளது. சைதன்ய சரிதாம்ருத்தில் ஒரு அருமையான ஸ்லோகம் உள்ளது:
அனாதி பஹிர்-முக ஜீவ க்ருʼஷ்ண புலி கேளா அதஏவ க்ருʼஷ்ண வேத புராண கரிலா (CC Madhya 20.117) கடவுளை நாம் எப்போது மறந்தோம், எப்போது நாம் கடவுளுடனான உறவை இழந்தோம் என்பது நமக்கு தெரியாது. நாம் கடவுளுடன் நித்தியமாக தொடர்புடையவர்கள், நாம் இன்னும் தொடர்புடையவர்கள். நமது உறவு இழக்கப்படவில்லை. ஒரு தந்தையும் மகனும் போல, உறவு இழக்கப்பட முடியாதது, ஆனால் மகன் பைத்தியமாகும் போது, அவன் நினைக்கின்றான் தனக்கு தந்தை இல்லை என்று. அது கட்டுண்ட... ஆனால் உறவு உண்மையில் இழக்கப்படவில்லை. அவன் தனது உணர்வுக்கு திரும்பும் போது, 'ஓ, நான் இப்படிப்பட்ட ஒரு பெரிய மனிதனின் மகன்'. உறவு உடனே அங்கு ஏற்படுகிறது. இதேபோல, நமது உணர்வு, இந்த பௌதிக உணர்வு, ஒரு பித்து பிடித்த நிலையாகும். நாம் கடவுளை மறந்து விட்டோம். கடவுள் இறந்துவிட்டார் என்று பிரகடனம் செய்கிறோம். உண்மையில் நான் தான் இறந்து விட்டேன். நான் நினைக்கின்றேன் 'கடவுள் இறந்து விட்டார்' என்று." |
690119 - சொற்பொழிவு - லாஸ் ஏஞ்சல்ஸ் |