"முதன்முதலாக, பகவானைப் பற்றிய பொதுக்கருத்து என்ன? "பகவான் மிகவும் உயர்ந்தவர். அவரைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை, மேலும் அவருக்கு சமமானவர் எவரும் இல்லை." அவர்தான் பகவான். அஸம-ஊர்த்வ. சரியான சமஸ்கிருத வார்த்தை அஸம-ஊர்த்வ. அஸம என்றால் "சமமல்ல." எவரும் பகவானுக்கு சமமாக முடியாது. இது சிறந்த ஆசார்யர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அவர்கள் பகவானின் பண்புகளை பகுப்பாய்வு செய்யதார்கள். அவருடைய பண்புகள் அறுபத்து நான்கு என்று பகுப்பாய்வு செய்யதார்கள். மேலும் அந்த அறுபத்து நான்கில், நாமக்கு இருப்பது, ஜீவாத்மாக்களாகிய நமக்கு இருப்பது ஐம்பது மட்டுமே. மேலும் அதுவும் மிகவும் குறைந்த அளவில் தான் இருக்கிறது."
|