"எனவே அனைத்தும் பகவானுடைய சொத்து. நீங்கள் பகவானுடைய மகனாக இருந்தாலும், பகவானுடைய அனுமதியில்லாமல் நீங்கள் எதையும் எடுத்துக் கொள்ள இயலாது. எவ்வாறு என்றால் உங்கள் தந்தையின் சொத்தைப் போல. நீங்கள் உரிமை வழியாக உங்கள் தந்தையின்... அது உண்மையே. ஆனால் ஒருவேளை உங்கள் தந்தை மேஜையின் மேல் ஆயிரம் டாலர் வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய அனுமதியில்லாமல் நீங்கள் எடுத்தால், "இது என் தந்தையின் பணம்," என்று நினைத்தால், சட்டத்தின் முன் நீங்கள் குற்றவாளியாவீர்கள். உங்கள் தந்தை குற்றவாளி என்று உங்கள் மீது வழக்குத் தொடரலாம். அது தான் மாநில சட்டம். உங்கள் தந்தையின் பணமாக இருந்தாலும், உங்கள் தந்தை மிகவும் கருணையானவராக இருந்தாலும், ஆனால் அவருடைய பணத்தை அவருடைய அனுமதியின்றி எடுத்தால், பிறகு நீங்கள் குற்றவாளி தான். மேலும் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? அதேபோல், நாம் அனைவரும் பகவானின் பிள்ளைகள்."
|