"ஒவ்வொரு ஜீவாத்மாக்களும் அனுபவிப்பதற்கு தகுதி பெற்றவர்கள், ஏனென்றால் அவர்கள் பகவானின் அங்க உறுப்புக்கள். அவர்களும் அங்க உறுப்புக்கள் ஆனபடியால், அவர்களும் அனுபவிப்பவர்கள், என்றாலும் மிகவும் சிறிய அளவில்தான். ஆனால் அவர் பகவானுடன் இணைந்து அனுபவிக்கலாம். எனவே பகவானுடன் இணைந்துக் கொள்ள, அவர் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். யஸ்மாத் ப்ரஹ்ம-ஸௌ... ப்ரஹ்ம, ப்ரஹ்ம-ஸௌக்யம். ப்ரஹ்ம என்றால் வரம்பற்ற, அல்லது ஆன்மீகம். ஆன்மீகம் என்றால் வரம்பற்ற, முடிவற்ற, நித்தியமான- மிகப்பெரிய. இவைதான் ப்ரஹ்ம என்பதன் சில பொருள். எனவே நிங்கள் ஆனந்தத்தை தேடிச் செல்கிறீர்கள்; அது உங்களுடைய தனிச் சிறப்பு. அது உங்களுடைய உரிமை. நீங்கள் அப்படி இருக்க வேண்டும். ஆனால் நிங்கள் இந்த புலன் நுகறும் தளத்தில் தேடுகிறீர்கள், அது உங்களுக்கு கிடைக்காது. உங்களுடைய இந்த நிலையை தூய்மைப்படுத்தினால், பிறகு ஆன்மீக இருப்பிடத்தில் அளவற்ற மகிழ்ச்சியை பெறுவீர்கள்."
|