"எனவே தூங்குவதும்...உண்பது, தூங்குவதும், இனச்சேர்க்கை - உடலுறவு. புறாக்கள் அனுபவிக்கும் அதே இன்பம், நீங்களும் அனுபவிக்கிறீர்கள். மேலும் தற்காத்தல் - புறாக்கள் தன் இறக்கையால் தற்காத்துக் கொள்கின்றன; நீங்கள் அணுகுண்டால் தற்காத்துக் கொள்கிறீர்கள். ஆகவே வாழ்க்கையின் தரத்தில் வேறுபாடு இல்லை. எனவே கிருஷ்ணர் "வேலையை நிறுத்துங்கள்," என்று சொல்லும் போது, அதன் பொருள் என்னவென்றால் மிருகங்களைப் போல் வேலை செய்வதை நிறுத்துங்கள் என்று அர்த்தம், கிருஷ்ண பக்தி மக்களைப் போல் செய்யும் வேலையை நிறுத்தாதீர்கள் - ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்வதை நிறுத்தாதீர்கள். உங்கள் மிருகத்தனமான வாழ்க்கையை நிறுத்தி மேலும் உங்கள் ஆன்மீக வாழ்க்கையை தொடங்குங்கள். அதுதான் நோக்கம்."
|