"இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் புலன்களை வெற்றிடமாக்குவதற்கல்ல. மற்ற தத்துவவாதிகள், அவர்கள் கூறுகிறார்கள், அதாவது "நீங்கள் ஆசைப்படக்கூடாது." நாங்கள் கூறுகிறோம் முட்டாள்தனமாக ஆசைப்படாதீர்கள், ஆனால் கிருஷ்ணரை அடைய ஆசைப்படுங்கள். ஆசை அங்கே இருக்கிறது, ஆனால் அந்த ஆசை சுத்திகரிக்கப்பட்டால், பிறகு நான் கிருஷ்ணரை அடைய ஆசைப்படலாம். ஒருவர் கிருஷ்ணரை அடையமட்டும் ஆசைப்பட்டால், அது ஆரோக்கியமான நிலை. மேலும் ஒருவர் கிருஷ்ணரை தவிர வேறு ஏதொவொன்றுக்கு ஆசைப்பட்டால், அவன் நோய்வாய்பட்ட நிலையில் இருக்கிறான் என்று புரிந்திக் கொள்ள வேண்டும். நோய்வாய்பட்ட நிலை என்றால் மாயாவால் மாசுபடுத்தப்பட்டவன் என்று அர்த்தம். இது வெளிப்புறம். எனவே நம் தத்துவம், கிருஷ்ண பக்தி இயக்கம், ஆசைப்படுவதை நிறுத்துவதற்கு அல்ல ஆனால் ஆசையை சுத்திகரிக்க வேண்டும். மேலும் எவ்வாறு நீங்கள் சுத்திகரிக்க முடியும்? கிருஷ்ண உணர்வால் தான்."
|