"எனவே உண்மையான காரியம் கிருஷ்ணரின் மேல் அன்பை உருவாக்கிக் கொள்வது தான். அதுதான் வ்ருந்தாவன தரநிலை. வ்ருந்தாவனத்தில், நந்த மஹாராஜ மேலும் யஷோதா-மயீ, ராதாராணி, கொபிகள், மாட்டிடையர்கள், சிறுவர்கள், பசுக்கள், கன்றுகள், மரங்கள், இவர்களுக்கு கிருஷ்ணர் பகவான் என்று தெரியாது. நீங்கள் கிருஷ்ணா புத்தகத்தில் படித்திருக்கிறீர்கள், சிலநேரங்களில் கிருஷ்ணர் ஏதாவது அற்புதமாக செய்தால், அவர்கள் அவனை ஓர் அற்புதமான குழந்தை, பையன், அவ்வளவுதான், அல்லது குழந்தை என்று ஏற்றுக் கொள்வார்கள். கிருஷ்ணர் பகவான் என்று அவர்களுக்கு தெரியாது. ஆனால் கிருஷ்ணரை எல்லாவற்றுக் மேலாக நேசித்தார்கள். "
|