"எனவே முதல் காரியமாக, அதாவது ஒருவர் என்னைப் பற்றி மிகவும் கடுமையாக பேசினார் என்று வைத்துக் கொள்வோம். இயற்கையில் நமக்கு கோபம் வரும். எவ்வாறு என்றால் என்னை ஒருவர், "நீ ஒரு நாய்," அல்லது "நீ ஒரு பன்றி." என்று அழைப்பது. ஆனால் நான் தன்னையறிந்திருந்தால், நான் இந்த உடல் அல்ல என்பதை பூரணமாக அறிந்திருந்தால், நீ என்னை பன்றி, நாய் அல்லது அரசன், பேரரசர், மாட்சிமை நிறைந்தவன், அது என்ன? நான் இந்த உடல் அல்ல. எனவே நீ என்னை "மாட்சிமை நிறைந்தவன்" அல்லது நாய் அல்லது பன்றி, என்று அழைத்தால், நான் என்ன செய்யப் போகிறேன்? நான் மாட்சிமை நிறைந்தவனுமல்ல, நாயுமல்ல, பூனையும் அல்ல - அந்த மாதிரி எதுவுமில்லை. நான் கிருஷ்ணரின் சேவகன்."
|