"ஒரு மனிதன் தினமும் மில்லியன் டாலர்கள் சம்பாதிப்பதால், அவன் மில்லியன் பெண்களுடன் இனச்சேர்க்கையை அனுபவிக்கலாம் என்று அர்த்தமல்ல. இல்லை. அது சாத்தியமல்ல. அவனுடைய இனச்சேர்க்கையின் சக்தி, பத்து டாலர் சம்பாதிக்கும் ஒருவனைப் போல் தான் இருக்கும். அவனுடைய சாப்பிடும் சக்தி, பத்து டாலர் சம்பாதிக்கும் ஒருவனைப் போல் தான் இருக்கும். எனவே அவன் இவ்வாறு நினைப்பதில்லை அதாவது "என்னுடைய இன்பம் அனுபவிக்கும் வாழ்க்கையின் அளவு பத்து டாலர் சம்பாதிக்கும் ஒருவனைப் போல் தான். பிறகு நான் ஏன் தினமும் மில்லியன் டாலர்கள் சம்பாதிக்க கடினமாக வேலை செய்கிறேன்? என் சக்தியை ஏன் அவ்வாறு கெடுத்துக் கொண்டிருக்கிறேன்?" நீங்கள் பார்த்தீர்களா? அவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ந மாம்ʼ துஷ்க்ருʼதின꞉... (ப.கீ. 7.15). அவன் உண்மையில் தினமும் மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் போது, அவன் தன்னையும், அவன் நேரத்தையும், சக்தியையும் எவ்வாறு பகவானை புரிந்துக் கொள்வது, வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்வதில் ஈடுபடித்திருக்க வேண்டும்."
|