TA/690216b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே இங்கு, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில், இது நேரடியாக வெறுமனே கிருஷ்ணரை பற்றி தான். அங்கே ஒன்றுமில்லை... ஆகையினால் இந்த சிறுவர்களைவிட தியானம் செய்வதில் சிறந்தவர்கள் வேறு யாருமில்லை. அவர்கள் வெறுமனே கிருஷ்ணர் மீது கவனம் செலுத்துகிறார்கள். அவர்களுடைய முழு வேலையும் கிருஷ்ணர் தான். அவர்கள் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள், பூமியை தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்: "ஓ, அழகான ரோஜா பூக்கள் இருக்கும், நாங்கள் கிருஷ்ணருக்கு அளிப்போம்." தியானம். செயல்முறை தியானம்: "நான் ரோஜாபூ வளர்ப்பேன் மேலும் அது கிருஷ்ணருக்கு அளிக்கப்படும்." தோண்டுவதிலும் கூட தியானம் இருக்கும். நீங்கள் பார்தீர்களா? அவர்கள் சுவையான உணவுப் பொருள்களை தயார் செய்கிறார்கள், "ஓ, அது கிருஷ்ணரால் உட்கொள்ளப்படும்." எனவே சமைப்பதிலும் தியானம் இருக்கிறது. நீங்கள் பார்தீர்களா? மேலும் உச்சாடனம் செய்வதை பற்றியும் நடனம் ஆடுவதை பற்றியும் என்னவென்று சொல்வது. ஆகவே அவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் கிருஷ்ணர் மீது தியானத்தில் இருக்கிறார்கள். பூரணமான யோகி."
690216 - சொற்பொழிவு BG 06.13-15 - லாஸ் ஏஞ்சல்ஸ்