"எப்படியோ அல்லது வேறு விதமாக விரல் துண்டிக்கப்பட்டுவிட்டது, மேலும் அது தரையில் விழுந்து கொண்டிருக்கிறது, அதற்கு மதிப்பில்லை. என்னுடைய விரல், துண்டிக்கப்பட்டு மேலும் அது தரையில் கிடந்தால், அதற்கு மதிப்பில்லை. ஆனால், விரல் உடலுடன் இணைக்கப்பட்டவுடன், அதற்கு மில்லியன் மேலும் டிரில்லியன் டாலரில் மதிப்பு ஏற்படுகிறது. விலைமதிப்பற்றது. அதேபோல், நாம் பகவான் அல்லது கிருஷ்ணரிடமிருந்து இந்த பௌதிக நிலையால் துண்டிக்கப்பட்டிருக்கிறோம். மறதி... துண்டிக்கப்படவில்லை. இணைப்பு அங்கிருக்கிறது. நமக்கு தேவையானவற்றை எல்லாம் பகவான் வழங்குகிறார். எவ்வாறு என்றால் அரசு கைதி சிவில் துறையிலிருந்து துண்டிக்கப்பட்டது போல், அவன் குற்றவாளி துறைக்கு வந்தது போல். உண்மையில் துண்டிக்கப்படவில்லை. அரசாங்கம் இன்னமும் கவனித்துக் கொள்கிறது, ஆனால் சட்டப்படி துண்டிக்கப்பட்டுவிட்டது. அதேபோல், நாம் துண்டிக்கப்படவில்லை. நாம் துண்டிக்கப்பட முடியாது, ஏனென்றால் கிருஷ்ணர் இல்லாமல் எதற்கும் இருப்பு இல்லை. ஆகவே நான் எவ்வாறு துண்டிக்கப்பட முடியும்? துண்டிக்கப்படுவதென்றால் கிருஷ்ணரை மறந்துவிடுவது, கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவதிற்கு பதிலாக, நான் பல முட்டாள்தனமான உணர்வில் ஈடுபடுகிறேன். அதுதான் துண்டிக்கப்படுவது."
|