"வெறுமனே ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கலௌ, இந்த கலியுகத்தில் உச்சாடனம் செய்வதை தவிர, கலௌ நாஸ்த்ய் ஏவ, நாஸ்த்ய் ஏவ, நாஸ்த்ய் ஏவ: வேறு மாற்று வழி இல்லை, வேறு மாற்று வழி இல்லை, வேறு மாற்று வழி இல்லை. இந்த முறையை நீங்கள் ஏற்றுக் கொண்டால், இந்த பக்தி-யோக முறை, மிகவும் எளிமையானது, வெறுமனே உச்சாடனம் செய்வது, உடனடியாக விளைவை காண்பீர்கள். ப்ரத்யக்ஷாவகமம்ʼ தர்ம்யம் (ப.கீ. 9.2). வேறு விதமான யோகா முறையை, நீங்கள் பயிற்சி செய்தால், நீங்கள் இருளில் இருப்பீர்கள்; நீங்கள் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறீர்கள் என்று தெரிந்துக் கொள்ள இயலாது. ஆனால் இந்த முறையில், நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள், 'ஆம், நான் இத்தகைய முன்னேற்றம் அடைந்திருக்கிறேன்'."
|