"எனவே கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் அருமையானது அதாவது நீங்கள் அதில் சேர்ந்தவுடன், உடனடியாக நீங்கள் கறைபடாதவராகிவிடுவீர்கள். ஆனால் மறுபடியும் கறைபடாதீர்கள். ஆகையினால் தான் இந்த கட்டுப்பாடு. ஏனென்றால் நம் கறை இந்த நான்கு வகையான தவறான பழக்கத்தால் ஆரம்பமாகிறது. ஆனால் நாம் அதை கவணித்தால், பிறகு கறைப்படுவதிற்கு சாத்தியமில்லல். நான் கிருஷ்ண உணர்வில் சேர்ந்தவுடன் விடுதலை அடைந்துவிடுவேன். இப்போது, நான் இந்த நான்கு கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்தால், பிறகு எனக்கு விடுதலை தான்; நான் தொடர்ந்து கறைபடாதவராகிவிடுவேன். இதுதான் செயல்முறை. ஆனால் நீங்கள் இவ்வாறு நினைத்தால், அதாவது "கிருஷ்ண உணர்வு என்னை விடுதலை அடையச் செய்கிறது, எனவே நான் இந்த நான்கு கொள்கைகளில் ஈடுபட்டு, பிறகு நான் உச்சாடனம் செய்வதனால் விடுதலை பெறுவேன்." அது ஏமாற்று வேலை. அது அனுமதிக்கப்படாது."
|