"இப்போது, நான் இந்த கையின் தொடும் உணர்வினை அனுபவிக்க சில மென்மையான இடத்தை தொட விரும்புகிறேன். ஆனால் கையுறைகளால் கை மறைக்கப்பட்டிருந்தால், என்னால் உணர்வுகளை நன்றாக அனுபவிக்க முடியாது. நீங்கள் எளிதாக புரிந்துக் கொள்ளலாம். உணர்வு அங்கிருக்கிறது, ஆனால் அது செயற்கையாக மறைக்கப்பட்டிருக்கிறது, இருப்பினும் வசதிகள் இருக்கின்றன, என்னால் அந்த உணர்வுகளை பூரணமாக அனுபவிக்க முடியாது. அதேபோல், நமக்கு நம் உணர்வுகள் இருக்கின்றன, ஆனால் நம் உணர்வுகள் இந்த ஜட உடலால் மறைக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணர் நமக்கு பகவத் கீதையில் அறிகுறி கொடுக்கிறார் அதாவது, அந்த பெரும் மகிழ்ச்சி உணர்வுகளால் அடையலாம், இந்த மறைக்கப்பட்ட உணர்வால் அல்ல."
|