"ஒவ்வொரு ஜீவாத்மாக்களும் இயற்கையில் மகிழ்ச்சியானவர்கள், ஆன்மீக ரீதியாக. மேலும் அவர் ஜட ரீதியாக மறைக்கப்பட்டிருப்பதால், அவருடைய மகிழ்ச்சி தடைபட்டுவிட்டது. அதுதான் உண்மையான நிலை. காய்ச்சல் நிலை, ஒருவர் நோய்வாய்படுகிறார், காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார் - அவருடைய மகிழ்ச்சி விட்டு செல்கிறது. அவர் நோய்வாய்படுகிறார். அதேபோல், மகிழ்ச்சி தான் நம் இயற்கையான நிலை. ஆனந்தமயோ அப்யாஸாத். கிருஷ்ணர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் கிருஷ்ணரின் அங்க உறுப்பு; ஆகையினால் நானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அது இயற்கைதான். என் தந்தை கறுப்பாக இருந்தால், பிறகு நானும் கறுப்பாக இருப்பேன். என் தாய் கறுப்பாக இருந்தால், நானும் கறுப்பாக இருப்பேன். எனவே நம் தந்தை, பரம தந்தை கிருஷ்ணர், மகிழ்ச்சியாக இருக்கிறார்."
|