"எனவே வைஷ்ணவர் அடக்கமாகவும் மேலும் சாந்தகுணம் உடையவர்களாகவும் இருப்பார்கள். அவர் பெருமை மிக்கவராக இருக்கமாட்டார், ஏனென்றால்... அவரிடம் சொத்து பெரிய அளவில், சிறந்த தகுதி, அனைத்தும் இருந்தாலும், அவர் நினைக்கிறார் அதாவது 'இந்த பொருள்கள் கிருஷ்ணருடையது. நான் அவருடைய வேலைக்காரன். அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு இந்த தகுதியுடன் எனக்கு கிடைத்துள்ளது.' நான் உயர்ந்த கல்வி கற்றிருந்தால், எனக்கு சிறந்த அறிவு இருந்தால், நான் ஒரு உயர்ந்த தத்துவவாதியாக, விஞ்ஞானியாக - அனைத்தும் இருந்தாலும் - நான் இந்த தகுதிகள் அனைத்தையும் கிருஷ்ணருக்கு சேவை செய்வதில் ஈடுபடுத்தவில்லை என்றால், பிறகு நான் பொய் பெருமை உடையவனாகிவிடுவேன், மேலும் அதுவே என் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும்."
|