"எனவே ஆன்மீக உலகம், பௌதிக உலகிலிருந்து வேறுபட்டது. ஆன்மீக ரீதியாக அது வேறுபட்டது. ஆக இப்போது ஆன்மீக ரீதியாக நமக்கு புரியாது, ஏனென்றால் நாம் கருப்பொருளில் மூழ்கியுள்ளோம். ஆனால் நம்பகமான ஆதாரம் மூலம் நாம் புரிந்துக் கொள்வோம், அங்கீகாரம் பெற்ற ஆதாரம் மூலம், அதாவது கிருஷ்ணர் எங்கும் இருக்கிறார், அவர் வெகு தொலைவில் இந்த ஜட உலகிற்க்கு அப்பால் வெகு தூரத்தில் அவருடைய இருப்பிடத்தில் இருப்பினும். ஆக நான் இப்போதுதான் பௌதிக உலகைப் பற்றி விவரித்தேன், நாம் வரம்பை அடைய முடியாது, மேலும் வானத்திற்க்கு அப்பால் இருக்கும் ஆன்மீக உலகிற்க்கு செல்வதைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஆனால் பௌதிக ரீதியாக சாத்தியமில்லை என்றாலும், ஆன்மீக ரீதியாக அது சாத்தியமே. ஆன்மீக ரீதியாக அது சாத்தியமே. எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் ஒரு ஆன்மீக இயக்கம்; இது பௌதிக இயக்கம் அல்ல."
|