"எனவே எங்கள் மாணவர்களை எவ்வாறு பகவானுக்கு, பழமையான சேவை செய்யும் நித்தியமான இயல்பான நிலையை புதுப்பிப்பது என்று பயிற்சி அளிக்க அவர்களுக்கு கல்வி கற்பிக்கிறோம். இது தான் எங்கள் பயிற்சி. எவ்வாறு என்றால் பகவான் உட்காரும் இடத்தை சிறுவர்கள் எப்படி அலங்காரம் செய்திருக்கிறார்கள், எவ்வளவு அழகாக, மலர்களாலும் மெழுகுவர்த்தியாலும் அலங்காரம் செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் காணலாம். அது அதிகமாக விலையுயர்ந்ததல்ல, ஆனால் அது மிக அழகாகவும் உடனடியாக ஈர்க்கிறது. எனவே எல்லோரும் வீட்டில் பயிற்சி செய்யலாம். சில மலர்களை, இலைகளை சேகரித்து, அலங்காரம் செய்து, மேலும் பகவானின் சிலை அல்லது படம் வைத்து, அவருக்கு கொஞ்சம் பழங்களும் மலர்களும் நெய்வேதியம் செய்வது மிகவும் கஷ்டமான வேலையா? எல்லோரும் இதை செய்யலாம். மேலும் இதை செய்வதனால், அவர் வாழ்க்கையில் உயர்ந்த பூரணத்துவத்தை பெறுவார்: மீண்டும் இந்த ஜட உலகத்திற்கு வந்து இந்த முட்டாள்தனமான துன்பத்தை அனுபவிக்க வேண்டியதில்லை. இதுதான் எங்கள் பயிற்சி."
|