"சைதன்ய மகாபிரபு கூறியது போல், அதாவது இந்த பிரபஞ்சம் ஒரு சிறிய கடுகு, நிறைந்த கடுகு இருக்கும் ஒரு பையில் இருப்பது போல தான். நீங்கள் பை நிறைய கடுகை எடுத்தால், அதில் எத்தனை இருக்கிறது என்று உங்களால் எண்ண முடியாது. அது சாத்தியமா? ஒரு பையில் தானியங்களை எடுத்து, அதில் எத்தனை தானியம் இருக்கிறது என்று எண்ணுவது சாத்தியமா? சைதன்ய மகாபிரபு இந்த பிரபஞ்சத்தை ஒப்பிடுகிறார்... அவர் பக்தர்களில் ஒருவர், வாஸுதேவ தத்த... அதுதான் பக்தரின் அணுகுமுறை, அவர் சைதன்ய மகாபிரபுவிடம் கோரிக்கையிட்டார், 'என் அன்பு பகவானே, தாங்கள் கருணையுடன், தாழ்வை அடைந்த ஆத்மாக்களை காப்பாற்ற வந்திருக்கிறீர்கள். தயவுசெய்து உங்கள் பணியை நிறைவேற்றுங்கள். அனைத்து ஆத்மாக்களையும், பிரபஞ்சத்தின் கட்டுண்ட ஆத்மாக்களையும் கொண்டு செல்லுங்கள். ஒன்றையும் விட்டுவிடாதீர்கள். தயவுசெய்து அவர்களை கொண்டு செல்லுங்கள். அவர்கள் தகுதியுடையவர்கள் அல்ல என்று நீங்கள் நினைத்தால் அல்லது சிலர் தகுதியுடையவர்கள் அல்ல என்றால், பிறகு அவர்களுடைய பாவச் செயல்களை என்மீது பரிமாற்றம் செய்யுங்கள். நான் துன்பத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் அனைவரையும் கொண்டு செல்லுங்கள்' ஒரு பக்தனின் அணுகுமுறையை பாருங்கள்."
|