"உங்களால் பகவானை பார்க்க முடியாது, உங்களால் பகவானை நுகர முடியாது, உங்களால் பகவானை தொட முடியாது, உங்களால் பகவானை சுவைக்க முடியாது - ஆனால் உங்களால் செவியால் கேட்க முடியும். அதுதான் உண்மை. உங்களால் செவியால் கேட்க முடியும். பகவானை யார் என்பதை புரிந்துக் கொள்ள இந்த கேட்கும் செயல் மிகவும் முக்கியமான விஷயம். எனவே எங்கள், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் கேட்கும் செயலாகும். கேட்கும் செயல். எவ்வாறு என்றால் நாங்கள் உச்சாடனம் செய்வோம் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. நாங்கள் கிருஷ்ணரின் பெயரை கேட்டுக் கொண்டிருக்கிறோம். கேட்பதன் மூலம் கிருஷ்ணரின் தோற்றம் எப்படி இருக்கும் என்று புரிந்துக் கொள்கிறோம். கிருஷ்ணரின் உருவம், கேட்பதன் மூலம் நாங்கள் இங்கு வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். இது கற்பனை அல்ல."
|