"உச்சாடனமும் மேலும் செவியால் கேட்பதும் பக்தி நிறைந்தது அதாவது அது படிப்படியாக உங்கள் மனதை சுத்தம் செய்யும், மேலும் பகவான் யார் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் - பகவான் யார், பகவானுடனான உங்கள் உறவு என்ன, அவருடைய செயல்பாடு என்ன, உங்களுடைய செயல்பாடு என்ன. இவை அனைத்தும் தானாக, படிப்படியாக வந்துவிடும். அது சிறிது காலம் பிடிக்கும்... ஒரு நோயை குணப்படுத்த சில காலம் எடுப்பதுபோல, மருந்தை உடனே கொடுத்ததும், அவர் உடனே குணமடைவார் என்பதல்ல. உடனே குணமடைவார், நிச்சயமாக, கேட்பதன் மூலமும், அத்துடன் ஒருவர் கவனமாக கேட்க வேண்டும். ஆனால் அது சாத்தியமல்ல, ஏனென்றால் நாம் இந்த பௌதிக மாசுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். அதற்கு சில காலம் தேவை. ஆனால் இது மட்டும்தான் இந்த யுகத்தின் ஒரே செயல்முறை. வெறுமனே இந்த ஜெபித்தலை கேளுங்கள், ஹரே கிருஷ்ணா, மேலும் கேளுங்கள், மேலும் உங்களுக்கு நேரம் கிடைத்தால் புத்தகங்களை படியுங்கள். அதுவும் செவியால் கேட்பதுதான்."
|