"எனவே இந்த கடவுள் பக்தி இயக்கம் அதிகரித்து வருகிறது, ஏனேன்றால் அது இயற்கையானது. அனைவரும் பகவானின் அங்க உறுப்புக்கள், தந்தையும் மகனும் போல் - அங்கே இரத்த பந்தத்தால் இயற்கையான தொடர்பு இருக்கிறது. அந்த குழந்தையைப் போல. ஏனேன்றால் ஒரு குறிப்பிட்ட தாயின் குழந்தை, அவளுக்கு தாயின் மீது இயற்கையான பாசம் இருக்கிறது. எப்பொழுதும், நான் சொல்வதாவது, தாயுடன் நடந்து செல்கிறாள். அதேபோல், நீங்கள் அனைவரும் பகவானின் பிள்ளைகள். நமக்கு பகவான் மீது இயற்கையான பாசம் இருக்கிறது. எதிர்பாராதவிதமாக, நீங்கள் மறந்துவிட்டீர்கள். இதுதான் நம் நிலை. இதைதான் மாயை என்று அழைக்கிறோம்."
|