"ஆக வரலாற்று குறிப்பிலும், ஒற்றை நபர் கூட கிருஷ்ணருடன் ஒப்பிடும் வகையில் இல்லை. ஆகையினால் அவர் அனைத்து கவர்ச்சியும் நிறைந்தவர். மேலும் நாம் அனுபவத்தில் காண்பதெல்லாம், கிருஷ்ணரின் சக்தியின் விரிவாக்கம். பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ருயதே (சி.சி. மத்ய 13.65). அவருடைய சக்தி வித்தியாசமாக வெளிப்படுத்தப்பட்டது. அதேபோல், விஷ்ணு புராணத்திலும், அது சொல்லப்பட்டுள்ளது, பரஸ்ய ப்ரஹ்மண꞉ ஷக்திஸ் ததைவ அகிலம்ʼ ஜகத் (விஷ்ணு புராண 1.22.56). அகிலம்ʼ ஜகத் என்றால் அனைத்து பிரபஞ்ச வெளிப்பாடும் முழுமுதற் கடவுளின் பல-சக்திகளின் காட்சியாகும்."
|