TA/690331 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் மாயா என்று கூறுவது... மாயா என்றால்... மா என்றால் "இல்லை," மேலும் யா என்றால் "இது." நீங்கள் எதை உண்மை என்று ஏற்றுக் கொள்கிறீர்களோ, அது உண்மையல்ல. இதுதான் மாயா என்று அழைக்கப்படுகிறது. ம-ய. மாயா என்றால் "அதை உண்மை என்று ஏற்றுக் கொள்ளாதீர்கள்." அது வெறுமனே ஒளிரும் ஒளி மட்டுமே. நாம் கனவில் பல விஷயங்களை காண்பது போல், மேலும் காலையில் நாம் அனைத்தையும் மறந்துவிடுவோம். இது சூக்கும கனவு. மேலும் இந்த இருப்பு, இந்த உடல் இருப்பு மேலும் உடலுக்கான உறவு - சமூகம், நட்பு, நேசம் மேலும் இன்னும் பல விஷயங்கள் - இவை அனைத்தும் ஸ்தூல கனவு. அது முடிவடைந்துவிடும். அது இருக்கும்... எவ்வாறு என்றால் கனவு சில நிமிடங்களுக்கு இருக்கும் அல்லது சில மணி நேரம் நீங்கள் தூங்கும் போது, அதேபோல், இந்த ஸ்தூல கனவும் தங்கிவிடும், சுமார், சில வருடங்களுக்கு. அவ்வளவுதான். அதுவும் கனவுதான். ஆனால் உண்மையில் நாம் கனவு காண்பவர், அல்லது நடித்துக் கொண்டிருப்பவரை பற்றி அக்கறை கொள்கிறோம். எனவே நாம் அவனை அந்த கனவிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும், சூக்கும மேலும் ஸ்தூல கனவிலிருந்து. அதுதான் முன்மொழிவு. எனவே அது கிருஷ்ண உணர்வு என்னும் செயல்முறையால் மிகவும் சுலபமாக செயல்படுத்தலாம், மேலும் அது ப்ரஹ்லாத மஹாராஜாவால் விளக்கப்பட்டுள்ளது."
690331 - சொற்பொழிவு SB 07.06.09-17 - சான் பிரான்சிஸ்கோ