"எனவே ஆன்மீக குரு தேவையான ஒன்றாகும் மேலும் அவருடைய அறிவுரையும் தேவையான ஒன்றாகும். அந்த செயல்முறை தான் சீடர் பரம்பரை சங்கிலித்தொடர். பகவத் கீதையிலும், அர்ஜுனர் சரணடைகிறார். அவர் கிருஷ்ணரின் நண்பர். அவர் ஏன் தானே சரணடைந்தார், "நான் உங்கள் சீடர்"? நீங்கள் பகவத் கீதையில் பாருங்கள். அவர் அவ்வாறு செய்ய தேவையில்லை. அவர் தனிபட்ட நண்பர், ஒன்றாக பேசிக் கொண்டும், உட்கார்ந்துக் கொண்டும், ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார். இருப்பினும், கிருஷ்ணரை ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டார். எனவே அதுதான் முறை. புரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு செயல்முறை இருக்கிறது. அது குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஷிஷ்யஸ் தே அஹம்: "நான் இப்போது உங்கள் சீடர்." ஷிஷ்யஸ் தே அஹம்ʼ ஷாதி மாம்ʼ ப்ரபன்னம் (ப.கீ. 2.7) "நீங்கள் கனிவாக எனக்கு அறிவுறுத்துங்கள்." பிறகு அவர் பகவத் கீதை கற்பிக்க தொடங்கினார். ஒருவர் சிஷ்யன், அல்லது சீடராக இருந்தாலே தவிர, அறிவுரை கூறுவது தடைசெய்யப்பட்டுள்ளது."
|