TA/690409b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பௌதிக வாழ்க்கை என்றால் நம் புலன்களை திருப்திபடுத்துவது, மேலும் வைராக்ய-வித்யா, அல்லது தெய்வத் தொண்டு, அப்படியென்றால் கிருஷ்ணரின் புலன்களை திருப்தியடையச் செய்வது. அவ்வளவு தான். பௌதிக அன்பிற்கும் மேலும் ராதா-கிருஷ்ண அன்பிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? வேறுபாடு என்னவென்றால், பௌதிக உலகில், இரண்டு கட்சிகளும், அவரவர் சொந்த புலன்களை திருப்திபடுத்த முயற்சி செய்கிறார்கள். அது ஒரு பொருட்டல்ல. ஒரு பையன் ஒரு பெண்ணை நேசித்தாலும் அல்லது ஒரு பெண் ஒரு பையனை நேசித்தாலும், அதன் நோக்கம் அவனுடைய அல்லது அவளுடைய சொந்த புலன்களின் திருப்திக்காக. ஆனால் கோபிகள், அவர்களுடைய பார்வை... கோபிகள் மட்டுமல்ல; எல்லா மாடு மேய்க்கும் சிறுவர்கள், தாயார் யசோதா, நந்த மகாராஜா, விருந்தாவனத்தில் இருப்பவர்கள் அனைவரும். எனவே அனைவரும் கிருஷ்ணரை திருப்திபடுத்த தயாராக இருக்கிறார்கள்."
690409 - சொற்பொழிவு - நியூயார்க்