TA/690410 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இன்று நான் ஒரு அமெரிக்கன் அல்லது இந்தியன், நாளை அல்லது அடுத்த பிறப்பில், என்ன நடக்கப் போகிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்த உடல் நிச்சயமாக முடிவடைந்துவிடும். இந்த உடலை நான் அடையப் போவதில்லை. எனக்கு மற்றொரு உடல் கிடைக்கும். ஒருவேளை தேவர்களின் உடல் அல்லது ஒரு மரத்தின் உடல், அல்லது தாவரங்களின் உடல் அல்லது விலங்கின் உடல் - நான் கண்டிப்பாக மற்றொரு உடல் பெற வேண்டும். ஆக உயிர்வாழிகள் இவ்வாறாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள், வாஸாம்ʼஸி ஜீர்ணானி (ப.கீ. 2.22). எவ்வாறென்றால் நாம் ஒரு ஆடையிலிருந்து மற்றொரு ஆடையை மாற்றுவது போல், அதேபோல் மாயையின் செல்வாக்கின் மூலம் நாம் வேறுபட்ட நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறோம். மாயா என்னை கட்டாயப்படுத்துகிறது. மாயா இஸ் ஃபோர்சின்க் மே. ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி குணை꞉ கர்மாணி (ப.கீ. 3.27). நான் எதையாவது விரும்பியவுடன், உடனடியாக என் உடல் வடிவம் எடுக்கிறது. உடனடியாக ஒரு குறிப்பிட்ட வகையான உடல் வடிவம் எடுக்கிறது, மேலும் நான் மாற்றம் கொள்ள முதிர்ச்சியடைந்ததும், அடுத்த உடல் என் ஆசைபடி எனக்கு கிடைக்கிறது. ஆகையினால் நாம் எப்பொழுதும் கிருஷ்ணரை விரும்ப வேண்டும்."
690410 - சொற்பொழிவு SB 02.01.01-4 - நியூயார்க்