"மேம்பட்ட கிருஷ்ண பக்தர் ஆன்மீக உடலை பெற்றிருப்பதாக கருதப்படுகிறார்கள். இதே உதாரணம், நான் பலமுறை கொடுத்திருக்கிறேன்: இரும்பு துண்டைப் போல். நீங்கள் நெருப்பில் போட்டால், அது அதிக வெப்பமாகும். நெருப்பில் அதிக நேரம் இருந்தால், அது மிக அதிகமாக வெப்பமாகும். மேலும் இறுதியில் சிவப்பாக சூடாகும், அதனால் அந்த நேரத்தில், இந்த இரும்பு வேறு பொருளுடன் தொடுமளவில் இருந்தால், அது எரிந்துவிடும். அது இரும்பாக செயல்படாது; அது நெருப்பாக செயல்புரியும். அதேபோல், இந்த கிருஷ்ண உணர்வில், தொடர்ந்து உச்சாடனம் செய்வதால், உங்கள் உடலை ஆன்மீக சக்தி நிறைந்ததாக செய்துவிடுவீர்கள். அந்த நேரத்தில், நீங்கள் எங்கே சென்றாலும், எங்கே தொட்டாலும் அவன் ஆன்மீகவாதியாக ஆகிவிடுவான். அதேபோல், இந்த இரும்பு... ஆன்மீகம் ஆகாமல், சிவப்பாகாமல், நீங்கள் தொட்டால், அது செயல்படாது. எனவே நாம் ஒவ்வொறுவரும், இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வந்தவர்கள், எதிர் காலத்தில் போதிக்க வேண்டும் என்றும் மேலும் எதிர்காலத்தில் ஆன்மீக குருவாக வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் முதலில் நீங்கள் ஆன்மீகமாக வேண்டும்; இல்லையென்றால் அது பயனற்றது."
|