TA/690411b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"காட்டில் சில பிரச்சனை இருந்தது, ஏனென்றால் கம்சா கிருஷ்ணரை கொல்ல துரத்திக் கொண்டு இருக்கிறான். அவனுடைய உதவியாட்களை அனுப்பிக் கொண்டிருந்தான். எனவே சில அஸுர வருவார்கள், பகாஸுர, அகாஸுர, மேலும் கிருஷ்ணர் அவர்களை கொன்றுவிடுவார். மேலும் அந்த சிறுவர்கள் விட்டிற்கு சென்று அவர்கள் தாயாரிடம் கதையாக கூறுவார்கள். 'ஓ, அன்புத் தாயே! இத்தகைய விஷயங்கள் நடந்தது மேலும் கிருஷ்ணா அதை கொன்றான். மிகவும்...' (சிரிப்பொலி) தாய் கூறுவாள், 'ஓ, ஆமாம், நம் கிருஷ்ணா மிகவும் அற்புதமானவன்!' (சிரிப்பொலி) ஆக கிருஷ்ணர் அவர்களுக்கு இன்பம் அளிக்கிறான். அவ்வளவுதான். தாய் கிருஷ்ணரை பற்றி பேசுகிறார், சிறுவன் கிருஷ்ணரை பற்றி பேசுகிறான். ஆகையினால் அவர்களுக்கு கிருஷ்ணரை தவிர வேறு எதுவும் தெரியாது. கிருஷ்ணா. பிரச்சனை வரும்பொழுதெல்லாம், 'ஓ கிருஷ்ணா'. அங்கே நெருப்பு பற்றிக் கொண்டால், 'ஓ கிருஷ்ணா'. அதுதான் வ்ருʼந்தாவனத்தின் மகிமை. அவர்கள் மனம் கிருஷ்ணரால் கவரப்பட்டுள்ளது. தத்துவத்தால் அல்ல. புரிந்துக் கொள்வதால் அல்ல, ஆனால் இயற்கையான பாசத்தால். 'கிருஷ்ணன் எங்கள் கிராமத்து சிறுவன், எங்கள் உறவினன், எங்கள் நண்பன், எங்கள் காதலன், எங்கள் எஜமான.' ஏதோ ஒரு வழியில் அல்லது வேறு, கிருஷ்ணா."
690411 - உரையாடல் - நியூயார்க்