"முழுமையான வேத அறிவுறுரையும் மூவகைத் துன்பங்களிலிருந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனித சமுதாயத்தை பௌதிக வாழ்க்கையிலிருந்த விடுவிப்பதற்காகதான். இதுதான் வேத நாகரிகத்தின் நோக்கம் மற்றும் பொருள். அப்படியென்றால் இந்த வாழ்க்கையின் மனித உருவம், பலவிதமான பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கானது. அதுதான் மனிதனின் முயற்சியாக இருக்க வேண்டும். உண்மையில், அவர்கள் அவ்வாறு செய்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் வாழ்க்கையின் துயரங்களை குறைத்து மேலும் வாழ்க்கையில் சந்தோஷத்தை அடைய முயற்சி செய்கிறார்கள். அதுதான் அனைத்து செயல்களுக்கும் உத்வேகம். ஆனால் எதிர்பாராதவிதமாக, அதை எவ்வாறு செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை."
|