"எவ்வாறு என்றால் நான் இந்த ஆடையை அணிவது போல். அது அழுக்காகவோ அல்லது மிகவும் பழைய ஆடையாக இருந்தால் பிறகு நான் மாற்றிக் கொள்வேன்; நான் மற்றொரு ஆடையை பெற்றுக் கொள்வேன். அதேபோல், இந்த உடலும் அப்படிதான். அது அழுக்காகவோ அல்லது முதுமையை அடைந்தால், பிறகு நாம் மற்றொரு உடலுக்கு மாறுவோம், மேலும் இந்த உடலை விட்டுவிடுவோம். இதுதான் அனைத்து வேத இலக்கியத்தின் முழுமையான அறிவுறை. ஆகையினால் இந்த உடலின் செயல்கள் மட்டும் முழுமையல்ல. மேலும் அங்கே வேறுபட்ட உடல்கள் இருப்பதால், நாம் இந்த உடலுக்கு வந்திருப்பதால், இந்த உடலின் நிலை, பற்பல வெறுக்கத்தக்க உடலை கடந்து - நீர்வாழ், மிருகம், மரங்கள், செடிகள், நுண்ணுயிரிகள், ஊர்வன, இன்னும் பல... மீண்டும் மீண்டும் நாம் சொல்லியிருக்கிறோம், 8,400,000... ஆகவே இதுதான் வாய்ப்பு. இந்த வாழ்க்கை, இந்த மனித வாழ்க்கை, மேலும் முன்னேற்றம் அடைவதற்கான ஒரு வாய்ப்பாகும்."
|