TA/690417 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆராதிதோ யதி ஹரிஸ் தபஸா தத꞉ கிம் (நாரத-பஞ்சராத்ர). கோவிந்தன் ஆதி-புருஷன் ஹரி என்று அறியப்படுகிறார். ஹரி என்றால் 'உங்கள் துன்பங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு செல்பவர்'. அவரே ஹரி. ஹரா. ஹரா என்றால் எடுத்துக்கொண்டு போவது. ஹரதே. ஒரு திருடன் எடுத்துக்கொண்டு போவதை போல, ஆனால் பௌதிக ரீதியாக கருதும்பொழுது அவன் பெறுமதியான விஷயங்களை எடுத்துக் கொண்டு போகிறான். சில சமயங்களில் கிருஷ்ணர் கூட உங்களுக்கு விசேஷ கருணையை காட்டுவதற்காக உங்கள் பெறுமதியான பௌதிக உடமைகளை எடுத்துக்கொண்டு போகிறார். யஸ்யாஹம் அனுக்ருʼஹ்ணாமி ஹரிஷ்யே தத்-தனம்ʼ ஷனை꞉ (SB 10.88.8)."
690417 - சொற்பொழிவு - நியூயார்க்