"எனவே தற்போதைய தருணத்தில் கிருஷ்ணருடனான நம்முடைய நித்தியமான உறவை பற்றி மறந்துவிட்டோம். பிறகு, நல்ல சேர்க்கையால், தொடர்ந்து உச்சாடனம் செயதால், கேட்பதால், நினைவில் கொள்வதால், நாம் மீண்டும் நம் பழைய உணர்வை திரும்பப் பெறுகிறோம். அதுதான் கிருஷ்ண உணர்வு என்று அழைக்கப்படுகிறது. எனவே மறதி அற்புதமானதல்ல. அது இயற்கையானது, நாம் மறப்பது. ஆனால் நாம் இடைவிடாமல் தொடர்பில் இருந்தால், நாம் மறக்க வாய்ப்பில்லை. ஆகையினால், இந்த கிருஷ்ண உணர்வின் சேர்க்கை, பக்தர்கள், மேலும் தொடர்ந்து நிலையான ஜெபித்தல், வேதம், அது நம்மை சேதமுறாத நிலையில் வைக்கும், மறக்காமல் இருக்கும்."
|