"எல்லோரும் கிருஷ்ண உணர்வை அடைவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதை உங்களுக்கு கூறியிருக்கிறேன். அது சாத்தியமில்லை. ஆனால் ஆகாயத்தில் ஒரு சந்திரன் இருந்தால், அது இருளை நீக்குவதற்கு போதுமானது. பல நட்சத்திரங்கள் தேவையில்லை. ஏகஷ் சந்த்ரஸ் தமோ ஹந்தி ந ச தாரா ஸஹஸ்ரஷ꞉ (ஹிதோபதேஷ 25). கிருஷ்ண உணர்வு இயக்கம் என்றால் என்ன என்பதை ஒரே ஒருவர் பூரணமாக புரிந்து கொண்டாலே போதும், அவரால் மற்றவர்களுக்கு அளப்பரிய நன்மையை செய்து விட முடியும். நீங்கள் அனைவரும் புத்திசாலியான யுவதிகளும் இளைஞர்களும் ஆவீர்கள். இந்த கிருஷ்ண உணர்வு தத்துவத்தை உங்கள் எல்லாவிதமான காரணங்களினாலும் வாதங்களினாலும் புரிந்து கொள்ள முயலுங்கள். ஆனால் அதனை தீவிரமாக புரிந்து கொள்ள முயலுங்கள்."
|