"ஆங்கே பல யோகிகள் இருக்கிறார்கள்: கர்ம-யோகீ, ஜ்ஞான-யோகீ, த்யான-யோகீ, ஹத-யோகீ, பக்தி-யோகீ. யோகா செயல்முறை ஒரு படிகட்டைப் போன்றது. எவ்வாறு என்றால் நியூயார்க்கில், எம்பையர் மாநில கட்டிடம், அந்த 102-அடுக்குமாடி கட்டிடம், அங்கு படிகட்டு அல்லது மின்தூக்கி இருக்கிறது. எனவே யோகா செயல்முறை ஒரு மின்தூக்கியைப் போன்றது, உயர்ந்த பூரணத்தை அடையலாம். ஆனால் அங்கு வேறுபாடு உள்ளது, நான் சொல்ல நினைப்பது, குடியிருப்புகள். கர்ம-யோகாவைப் போல். நீங்கள் அணுகலாம், நீங்கள் முதல் அல்லது இரண்டாவது தளத்திற்கு முன்னேறலாம். அதேபோல், ஜ்ஞான-யோகா மூலம், நீங்கள் ஐம்பதாவது தளத்திற்கு முன்னேறலாம். மேலும் அதேபோல், த்யான-யோகா மூலம், நீங்கள் எண்பதாவது தளத்திற்கு முன்னேறலாம். ஆனால் பக்தி-யோகா மூலம், நீங்கள் ஆக உயர்ந்த தளத்திற்கு போகலாம். இதுவும் பகவத் கீதையில் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது, பக்த்யா மாம் அபிஜானாதி (ப.கீ. 18.55). 'என்னைப் பற்றி சதம் சதவீதம் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், பிறகு பக்தி-யோகாவிற்கு வாருங்கள்.' மேலும் பக்தி-யோகா என்றால் ஷ்ரவணம். முதல் காரியம் ஷ்ரவணம் மேலும் கீர்தனம். நீங்கள் வெறுமனே உச்சாடனம் செய்து செவியால் கேளுங்கள், எளிய செயல்முறை."
|