TA/690429 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பொற்காலத்தில், எல்லோரும் பக்திமானாக இருந்தபோது, அந்த நேரத்தில், தியானம் பரிந்துரைக்கப்பட்டது. தியானம். க்ருʼதே யத் த்யாயதோ விஷ்ணும்: விஷ்ணு மீது தியானம். த்ரேதாயாம்ʼ யஜதோ மகை꞉. அடுத்த யுகத்தில், பெரியளவில் தியாகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மேலும் அடுத்த யுகத்தில் ஆலய வழிபாடு, அல்லாது தேவாலய வழிபாடு, அல்லது பள்ளிவாசல் வழிபாடு பரிந்துரைக்கப்பட்டது. க்ருʼதே யத் த்யாயதோ விஷ்ணும்ʼ த்ரேதாயாம்ʼ யஜதோ மகை꞉, த்வாபரே பரிசர்யாயாம். த்வபர்... அடுத்த யுகம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், அந்த யுகம் த்வாபர-யுக என்று அழைக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆலயவழிபாடு மிகவும் அழகாகவும் மேலும் வெற்றிகரமாகவும் இருந்தது. இப்போழுது, இந்த யுகத்தில், கலியுகம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமானது, இந்த யுகத்தில், பரிந்துரைக்கப்பட்டது கலௌ தத் தரி-கீர்தனாத்: நீங்கள் வெறுமனே ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்வதன் மூலம் உங்களை உணரலாம். மேலும் நீங்கள் இந்த எளிய முறையை மேற்கொண்டால், அதன் விளைவு யாதெனில் சேதோ-தர்பண-மார்ஜனம் (சி.சி. அந்த்ய 20.12, ஷிக்ஷாஷ்டக). உங்கள் மனதில் நிறைந்திருக்கும் குப்பை விஷயங்கள் சுத்தப்படுத்தபடும்."
690429 - சொற்பொழிவு Brandeis University - பாஸ்டன்