"நாம் இப்படி சொல்ல முடியாது, எவ்வாறு என்றால், சில ஹோட்டல்களில், அதாவது 'இத்தகைய மற்றும் அத்தகைய நபர் அனுமதிக்கப்படவில்லை'. இல்லை. எங்களால் முடியாது. நாங்கள் எல்லோரையும் அனுமதிப்போம். எங்கள் நோக்கம் வாழ்க்கையில் கீழ் நிலையில் இருப்பவர்களை, வாழ்க்கையின் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதுதான். ஆக எல்லோரும் கீழ் நிலையில் இருக்கிறார்கள். பகவான் ஏசு கிறிஸ்துனாதரும் கூறினார் அதாவது 'நீங்கள் பாவிகளை வெறுக்காதீர்கள், ஆனால் பாவத்தை வெறுத்துவிடுங்கள்'. அது அவ்வாறில்லையா, பகவான் ஏசு கிறிஸ்து சொல்லியது? எனவே ஹிப்பீகள் பாவிகளாக இருக்கலாம். நாங்கள் அவர்களை பக்தி வாழ்க்கைக்கு உயர்த்தினோம். ஆனால் நாங்கள் சொல்வோம், 'இதை செய்யாதீர்கள். இந்த பாவச் செயல்களை செய்யாதீர்கள். போதையை எடுத்துக் கொள்ளாதீர்கள். இதை செய்யாதீர்கள். இதை செய்யாதீர்கள்.' நாங்கள் பாவத்தை வெறுகின்றோம், உண்மையில் பாவிகளை அல்ல. நாங்கள் பாவிகளை வெறுத்தால், பிறகு போதனை செய்வது எவ்வாறு சாத்தியமாகும்?"
|