"முழுமுதற் கடவுள் மீதான அன்பு எனும் அஞ்சனம் நமது கண்களில் தீட்டப்படும் போது, அந்த கண்களால் கடவுளை பார்க்க முடியும். கடவுள் கண்ணுக்குத் தெரியாதவரன்று. எப்படியென்றால், கண்புரை கொண்ட ஒரு மனிதனால் அல்லது வேறு கண் நோய் கொண்ட ஒருவனால் பார்க்க முடியாது. அதன் அர்த்தம் விஷயங்கள் இல்லை என்பதல்ல. அவனால் பார்க்க முடியாது. கடவுள் இருக்கிறார், ஆனால் எனது கண்கள் கடவுளை பார்க்க தகுதியற்றதாகையால் கடவுளை மறுக்கிறேன். கடவுள் எங்கும் இருக்கிறார். நமது பௌதிக வாழ்வில், நமது கண்கள் மழுங்கியுள்ளன. கண்கள் மட்டுமல்ல ஒவ்வொரு புலனும் மழுங்கியுள்ளது. விசேஷமாக கண்கள். ஏனென்றால் நமது கண்கள் பற்றி நாம் பெருமைப்பட்டுக் கொண்டு, 'கடவுளைக் காட்ட முடியுமா?' என்கிறோம். பாருங்கள். ஆனால் தனது கண்கள் கடவுளை பார்ப்பதற்குத் தகுதியானவையா என்பதைப் பற்றி சிந்திப்பதில்லை. அதுவே நாத்திகம்."
|