"இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் தூங்கிக் கொண்டிருக்கும் ஜீவாத்மாக்களை விழித்திருக்க வைப்பதற்கானது. வேத இலக்கியத்தில், உபநிஷத்தில், நாம் இந்த பதங்களை காண்கிறோம், அவை கூறுவதாவது, உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வரான் நிபோதத (கட உபநிஷத் 1.3.14). வேத குரல், திவ்வியமான குரல், கூறுகிறது, "ஓ மனிதநேயமே, ஓ ஜீவாத்மாக்களே, நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து விழித்து எழுங்கள்." உத்திஷ்டத. உத்திஷ்டத என்றால் 'தயவுசெய்து விழித்து எழுங்கள்'. எவ்வாறு என்றால் ஒரு மனிதன் அல்லது சிறுவன் நேரம் கழித்து தூங்கிக் கொண்டிருந்தால், அவன் பெற்றோர்கள், அவன் ஏதோ சில முக்கியமானவற்றை செய்ய வேண்டியுள்ளது என்பதை அறிந்து கொண்டு, 'என் அன்பு மகனே, தயவுசெய்து விழித்து எழு. இப்போது காலை நேரம். நீ உன் கடமை செய்ய போகவேண்டும். நீ உன் பள்ளிக்கு செல்ல வேண்டும்'."
|