"நீங்கள் இந்த ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்துக் கொண்டே இருந்தால், உங்களுடைய முதல் தவணை ஆதாயம் யாதெனில் நீங்கள் இந்த உடல் அல்ல, ஆன்மீக ஆன்மா என்பதை புரிந்துக் கொள்வீர்கள், 'நான் இந்த உடல் அல்ல' என்பதை புரிந்துக் கொள்ள பல வருடங்கள் எடுக்கும். எல்லோரும்... நீங்கள் யாரையும் கேளுங்கள், 'நீங்கள் யார்?' அவன் கூறுவான், ' நான் இது, ஐயா, இது மேலும் அது'. 'நான அமெரிக்கன்', 'நான் இந்த உடல்', 'நான் அந்த உடல்'. ஆனால் அவன் இந்த உடல் அல்ல என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் நீங்கள் இந்த ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சாடனம் செய்தால், உங்களுடைய முதல் தவணை ஆதாயம் யாதெனில் நீங்கள் தானே உணருவீர்கள், அஹம்ʼ ப்ரஹ்மாஸ்மி: 'நான் இந்த உடல் அல்ல, ஆனால் நான் ஆன்மீக ஆன்மா. நான் பரம புருஷரின் அங்க உறுப்பு'. நீங்கள் இதை புரிந்துக் கொள்ளும் இந்த நிலைக்கு வந்தவுடன், பிறகு அடுத்து நிலை யாதெனில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்."
|