TA/690505 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எப்படி ஆனந்தமடைவது என்பதுவே உங்கள் தொழில், ஏனென்றால் இயற்கையாகவே நீங்கள் ஆனந்தமானவர்கள். நோயுற்ற நிலையில் அந்த ஆனந்தம் சவால்களுக்குள்ளாகிறது. இந்த பௌதிக, கட்டுண்ட வாழ்வு, இந்த உடல் நமது நோயுற்ற நிலையாகும். நோயிலிருந்து விடுபடுவதற்கு ஒரு புத்திசாலி மனிதன் தன்னை ஒரு வைத்தியரின் சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்வது போல மனித வாழ்வு, பௌதிக நோயிலிருந்து குணப்படுத்தக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியரிடம் தன்னை ஒப்படைப்பதற்கானது. அதுவே உங்களது தொழிலாகும். தஸ்மாத் குரும்ʼ ப்ரபத்யேத ஜிஜ்ஞாஸு꞉ ஷ்ரேய உத்தமம் (SB 11.3.21). அதுவே அனைத்து வேத இலக்கியங்களினதும் அறிவுரையாகும். எப்படியென்றால், கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிப்பதை போல. அர்ஜுனன் கிருஷ்ணரிடம் சரணடைகிறான்."
690505 - சொற்பொழிவு Excerpt - பாஸ்டன்