TA/690506 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்கள் உணர்வை முழுமையாக கிருஷ்ணரில் ஆழ்த்திவிட்டால், கிருஷ்ணர் என்றால் என்ன, கிருஷ்ணருடனான உறவு என்ன, அந்த உறவில் எப்படி நடந்து கொள்வது, போன்றவற்றை புரிந்து கொண்டால், இந்த பிறவியில் வெறுமனே இந்த விஞ்ஞானத்தை நீங்கள் கற்றால், பின்பு பகவான் கிருஷ்ணராலேயே பகவத் கீதையில் உறுதியளிக்கப்படுகிறது, த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி மாம் ஏதி கௌந்தேய (BG 4.9). "இந்த உடலை நீத்த பின்னர், ஒருவன் 8,400,000 வகையான உயிரினங்களின் உடலை ஏற்பதற்காக இந்த பௌதிக உலகிற்கு மீண்டும் திரும்புவதில்லை, ஆனால் அவன் நேராக என்னிடம் வருகிறான்." யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம்ʼ மம (BG 15.6). "ஒருவனால் அங்கு செல்ல முடிந்தால், பௌதிக உடலை ஏற்பதற்காக மீண்டும் அவன் இந்த பௌதிக உலகிற்கு வருவதில்லை." பௌதிக உடல் என்றாலே மூவகைத் துன்பங்கள் எப்போதும் இருக்கும். குறைந்தபட்சம் நால்வகை துன்பங்களான பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் என்பவற்றின் மூலமாகவாவது மூவகைத் துன்பங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன."
690506 - சொற்பொழிவு Wedding - பாஸ்டன்